நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்-8 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த அர்ச்சகர் மரணம் - Agnipuratchi

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்-8 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த அர்ச்சகர் மரணம்

Share This

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்தவர் திரு.ராஜன் (எ) வெங்கடேஷ் (53). நேற்று வழக்கம் போல் ஆஞ்சநேயரருக்கு அபிஷேகம் செய்வதில் ஈடுபட்டுள்ளார். அப்போது, 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் விக்கிரகத்திற்கு 8 அடியில் இருந்து அர்ச்சகர்கள் நடந்து செல்லும் வகையில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, அபிஷேகம் போன்றவற்றை அர்ச்சகர்கள் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை வெங்கடேஷ் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கீழே விழுந்ததில் தலையில் ஏற்பட்ட படுபயங்கர காயத்தால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து கோயில் அதிகாரி கூறுகையில் மிகப்பழமை வாய்ந்த நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார். மேலும், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த வெங்கடேஷ், அவரது சகோதரர் நாகராஜனுக்கு உதவி அர்ச்சகராகப் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விழுந்த வீடியோ பதிவு இதோ 
 
📹http://v.duta.us/tLZfgQAA 
 
image credit : http://v.duta.us/WPnDLQAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages