தமிழகத்தில் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும் - வானிலை மையம் தகவல் - Agnipuratchi

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும் - வானிலை மையம் தகவல்

Share This

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையின்படி, 2005 ம் ஆண்டிற்கு பிறகு 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. 2018 ல் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக 167 விபத்துக்கள் நடந்துள்ளன. 2017 டிசம்பரில் 30 விபத்துக்கள் மட்டுமே நடந்துள்ளது. இதற்கு முன் அதிகபட்சமாக 2005 டிசம்பரில் 177 விபத்துக்கள் நடந்துள்ளன. மேலும் தமிழகத்தில் இன்னும் 2⃣ நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages