ஜனவரி 31ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு -தேர்தல் அதிகாரி - Agnipuratchi

ஜனவரி 31ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு -தேர்தல் அதிகாரி

Share This

ஜனவரி 31ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, வாக்காளர் பட்டியலில் ஏதேனும் சந்தேகம், குறைகள் இருந்தால் 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும். தாலுகா அலுவலகங்களில் திருத்தம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் அன்று தனியார் நிறுவனங்கள் கட்டாயம் விடுப்பு தர வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார். ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக இதுவரை பேரவை செயலாளரிடம் இருந்து அறிவிப்பு வரவில்லை என்று தெரிவித்தார். இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும் பட்சத்தில் தேர்தலை நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages