விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு, கோவை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடந்து பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும், விவசாயிகளின் போராட்டத்தை மீறி உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விளைநிலம் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் முழக்கமிட்டபடி, 80 அடி உயரமுடைய உயர்மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், வாழ்வாதாரத்தையும் பறிக்க கூடாது என்றும் முழக்கமிட்டனர். நேற்று, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனையடுத்து இன்றும் இந்த போராட்டம் தொடர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
பெருந்துறை அருகே உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment