உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கி, 2வது நாளாக இன்று நடந்து வருகிறது. இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த மாநாட்டின் மூலம் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுமார் 304 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கடந்த 2015ம் ஆண்டை விட 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 3.42 லட்சம் கோடி முதலீடு-தமிழக முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment