ஸ்டெர்லைட் விவகாரம்-தூத்துக்குடியில் 🏴கருப்பு தின போராட்டம் - Agnipuratchi

ஸ்டெர்லைட் விவகாரம்-தூத்துக்குடியில் 🏴கருப்பு தின போராட்டம்

Share This

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று கருப்பு தின போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே சில அமைப்புகள் கூறியிருந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட வணிகர் பேரவையினர் மீனவர்கள் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் இன்று 🏴கருப்புக்கொடி ஏற்றியுள்ளனர். எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இது குறித்து செய்தியாளர்களிடம் மாநில வணிகர் சங்க பேரவைத் துணைத் தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில், ''தூத்துக்குடி மாநகரில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை முழுவதுமாக அகற்ற வலியுறுத்தியே இன்று ⚫கருப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தூத்துக்குடி நகர வர்த்தகர்கள் மத்திய சங்கத்தின் சார்பாக 65 சங்கங்கள் உட்பட 25 ஆயிரம் கடைகள் இன்றைய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அனைத்துக் கடைகளிலும் ''ஸ்டெர்லைட் தடை' என்ற கருப்பு வாசகம் ஒட்டப்பட்டு, கருப்பு 🏴கொடியும் ஏற்றப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages