தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கமான பபாசி நடத்தும் 42வது புத்தக காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். அதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "நல்ல நூல்களை படிப்பதற்கு ஆகும் நேரத்தை விட அவற்றை தேர்ந்தெடுக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். 800க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 20ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த புத்தக காட்சி வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக காட்சியில், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கலை உலகினர் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நந்தனத்தில் 42வது புத்தக கண்காட்சி-முதல்வர் துவக்கி வைத்தார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment