பிரதம் கல்வி அமைப்பு சார்பில் ஆண்டு கல்வி அறிக்கை 2018 தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 20 ஆயிரத்து 435 மாணவர்களிடம் படிக்கும் திறன், கணிதப்பாடங்களில் கணக்குளை தீர்வு செய்யும் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு குறித்து பிரதம் கல்வி அமைப்பின் மாநிலத் தலைவர் டி. ஆலிவர் கூறுகையில் தமிழகத்தில் கிராமப்புறங்களில் 5ம் வகுப்பு பயிலும் 59 சதவீதம் மாணவர்கள், 3ம் வகுப்பு பயிலும் 89 சதவீத மாணவர்கள் 2ம் வகுப்பு பாடப்புத்தகங்களைப் படிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிக்கூடம் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வாசிக்கும், கணிதம் போடும் திறன் மாறுபட்டு அமைந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களில் 72.9 சதவீதம் பேருக்கு 5ம் வகுப்பு கணிதத்தில் வகுத்தல் கணக்குகளைச் செய்ய முடியவில்லை. இந்த அளவீடு தனியார் பள்ளிகளில் அதிகமாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் 77 சதவீத மாணவர்களால் கணிதத்தைச் செய்ய முடியவில்லை. அரசுப் பள்ளிகளில் பயிலும் 5ம் வகுப்பு மாணவர்களில் 53.7 சதவீதம் பேருக்கு 2ம் வகுப்பு பாடங்களை வாசிக்க முடியவில்லை. இது தனியார் பள்ளிக்கூடங்களில் 71.2 சதவீதமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
Home
அண்மை செய்திகள்
கிராமப்புறங்களில் படிக்கும் 5ம் வகுப்பு மாணவர்களால் 2ம் வகுப்பு பாடபுத்தகத்தினை படிக்க இயலவில்லை
கிராமப்புறங்களில் படிக்கும் 5ம் வகுப்பு மாணவர்களால் 2ம் வகுப்பு பாடபுத்தகத்தினை படிக்க இயலவில்லை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment