தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 555 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் படி, சென்னைக்கு 56 பேருந்துகள், விழுப்புரத்திற்கு 82 பேருந்துகள் மற்றும் சேலத்திற்கு 112 பேருந்துகள், குத்துக்கோணம் 102, கோவை 140, மதுரை 63 பேருந்துகள் என மொத்தம் 555 பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தொடங்கப்பட்ட பேருந்துகள் சிவப்பு நிறங்களில் ஏ.எஸ்.தொழில்நுட்ப முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்து வரும் பேருந்து நிலையம் என்ன என்பதை ஒலிப்பான் மூலம் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பேருந்துகளில் மாற்று திறனாளிகளுக்கு வசதியாக படிக்கட்டுகள் உள்ளது, ஓட்டுனர்களுக்கு மின்விசிறி, போன்ற வசதிகளோடு, விழுப்புரம் பேருந்துகளில் அம்மா குடிநீர் வழங்க ஏற்பாடு உள்ளிட்ட அதிநவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
தமிழக போக்குவரத்து துறை சார்பில் 555 பேருந்துகள் இயக்கம்-முதல்வர் துவக்கி வைப்பு
தமிழக போக்குவரத்து துறை சார்பில் 555 பேருந்துகள் இயக்கம்-முதல்வர் துவக்கி வைப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment