18 தொகுதிகளில் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் - Agnipuratchi

18 தொகுதிகளில் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Share This

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி உட்பட 20 தொகுதிகள் தமிழகத்தில் காலியாக உள்ளன. இந்நிலையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் தொகுதியான திருவாரூா் தொகுதிக்கு மட்டும் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டு பின்னா் அந்த அறிவிப்பும் ரத்து செய்யப்பட்டது. இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட மனு ஒன்றில், "18 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் அந்த தொகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் கோாிக்கைகளை யாரிடம் கூறுவது என்று தொியாமல் தவித்து வருகின்றனா். தகுதி நீக்கம் செய்யப்பட்டவா்கள் அனைவரும் இனி மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்று தொிவித்துள்ள நிலையில் இந்த தொகுதிகளில் தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை கிளை, 18 தொகுதிகளுக்கும் எப்போது தோ்தல் நடத்தப்படும் என்று வருகின்ற 22ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages