சேலத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்ட விவசாயிகள் - Agnipuratchi

சேலத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்ட விவசாயிகள்

Share This

விவசாய நிலங்களை அளித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அளித்தும் கொண்டு வரும் 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டவுடனேவே விவசாய நிலங்களில் நிலம் எடுக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினார்கள். அப்போது இருந்தே விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையிலும், ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலத்திற்கு அருகில் இருக்கக்கூடிய பகுதிகளை விரிவாக்கம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான சர்வே எண்களை அறிவித்தது. இதற்கும் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிப்பதற்காக இந்த விசாரணையானது சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியில் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் விவசாயிகள் நாங்கள் ஏற்கனவே ஆட்சேபனை தெரிவித்துள்ளோம், ஆனால் இப்போது எதற்கு எங்களை மீண்டும் விசாரணைக்கு அழைத்தீர்கள்⁉" என்ற வகையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages