கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற பின்னர் இந்தியாவின் 14-வது பிரதமராக 2014ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி அன்று நரேந்திர மோடி பதவியேற்றார். அதன் பின்னர் உள்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோதும் அவருக்கு நினைவுப்பரிசாக விலைமதிப்புள்ள பொருட்களை பல பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக அளித்துள்ளனர். அந்த பரிசுப்பொருட்கள் எல்லாம் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இங்கு வைக்கப்பட்டுள்ள சுமார் 1900 பரிசுப் பொருட்கள் வரும் 27, 28 தேதிகளில் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்படுகின்றன. தொடர்ந்து, 29,30 தேதிகளில் இணையதளம் வழியாக ஆன்லைன் ஏலமும் நடைபெறுகிறது. இவ்விரு ஏலங்களில் அதிகமான தொகையை தந்து பொருட்களை வாங்க பலர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வரும் பணம் தூய்மை கங்கா திட்டத்திற்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை கங்கா திட்டம்-ஏலத்தில் விடப்பட்டும் பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்கள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment