சென்னை உயர்நீதிமன்றத்தில், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், 2005ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். அதில், கோவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள விநாயகர் கோவிலை அகற்ற கோரியிருந்தார். மேலும், அரசு நிலங்கள், பொது சாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்களை கட்டக் கூடாது என்ற அரசாணையை பின்பற்ற உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அப்போது விசாரித்த நீதிபதி அரசு புறம்போக்கு நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் சிலர், கோவில் கட்டுவதாகவும், இதை இந்து சமய அறநிலையத்துறை ஊக்குவிக்கக் கூடாது என்றும், பொதுச் சாலைகளை ஆக்கிரமித்து கோவில்கள் கட்டுவதால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், இவ்வாறு ஆக்கிரமித்து கட்டப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தெய்வங்களாக இருந்தாலும் கூட ஆக்கிரமிப்பு செய்ய உரிமை இல்லை எனவும் தெரிவித்த அவர் தமிழ்நாடு முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வழிபாட்டுத் தலங்கள் குறித்த விவரங்களை வருகிற 21ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
பொது சாலைகளை ஆக்கிரமித்தது குறித்து சென்னை உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment