தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம் - Agnipuratchi

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Share This

தமிழகம் முழுவதும் வரும் 8,9 தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொமுச உட்பட 11 சங்கங்கள் ஒருங்கிணைந்து மொத்தம் 27,000 ஊழியர்கள் ஈடுபட உள்ளதாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொமுச மாநிலத் தலைவர் ராஜவேல் தெரிவித்துள்ளார். பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலுமுள்ள 6,000 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பின்பற்றும் கொள்கைகளினால் பலதரப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், ஊழியர்களும், அலுவலர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடை ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் சார்பில் கடந்த டிசம்பர் 21 அன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநரை சந்தித்து வேலைநிறுத்த அறிக்கை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages