ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போலி பெண் மருத்துவர் கைது - Agnipuratchi

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போலி பெண் மருத்துவர் கைது

Share This

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர் எனக் கூறி ஸ்கேன் எடுக்க 800 ரூபாய் நோயாளிகளிடம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது⛓ செய்தனர். மருத்துவர் எனக் கூறிய பெண் ஒருவர் ஏமாற்றி விட்டதாக அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த காவலரிடம் நோயாளி முறையிட்டுள்ளார். மேலும் அவர் அந்த பெண்ணை காவலரிடம் அடையாளம் காட்டினார். இதை அடுத்து அந்தப் பெண்ணை பிடித்து விசாரித்ததில் அவர் திருத்தணியைச் சேர்ந்த சர்மிளா என்பதும், அவர் உண்மையான மருத்துவர் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை, ஸ்டெத்தஸ்கோப் ஆகியவற்றைக் கைப்பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages