தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்தால் நடவடிக்கை-விஜயபாஸ்கர் - Agnipuratchi

தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்தால் நடவடிக்கை-விஜயபாஸ்கர்

Share This

தமிழ்நாட்டில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், 14 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போலியோ இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எந்தெந்த நோய்களை தடுப்பூசி மூலம் தடுக்க முடியுமோ அதனை தடுப்பூசிகள் போட்டு தடுத்து வருகிறோம். கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க சொட்டு மருத்துகள் கொடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது என்று கூறினார். மேலும் 2025ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் காசநோய் இல்லாத சூழலை கொண்டு வருவோம் என்றும், வரும் காலத்தில் நோயற்ற தமிழகத்தை உருவாக்கும் என்றும் கூறிய அவர், தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இதனை தொடர்ந்து, போலியோ சொட்டு மருந்து வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு மத்திய அரசுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages