ஹைட்ரொ கார்பன் திட்டம்-காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது - Agnipuratchi

ஹைட்ரொ கார்பன் திட்டம்-காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

Share This

திருவாரூர், திருக்காரவாசலை மையமாகக்கொண்டு கரியாப்பட்டணம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து திருக்காரவாசலை சேர்ந்த 300கும் மேற்பட்ட மக்கள் 4வது நாளாக விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களின் வாழ்வாதாரங்களை சீரழிக்கும் இத்திட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பங்கேற்றார். இதையடுத்து இன்று அதிகாலை அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 12 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விசாயிகளின் போராட்டத்தை தமிழக அரசு ஒடுக்க நினைப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages