இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்டு ராமேஸ்வரம் திரும்பும் மீன்வளத்துறை குழு - Agnipuratchi

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்டு ராமேஸ்வரம் திரும்பும் மீன்வளத்துறை குழு

Share This

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக, கடந்த 2014ம் ஆண்டு ஜூலை முதல் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் வரை தமிழக மீனவர்களின் 183 படகுகளை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர் இந்திய வெளியுறவுத்துறையின் வலியுறுத்தலை ஏற்று, படகுகளை விடுவிக்குமாறு, இலங்கை அரசு பரிந்துரை செய்தது. இதை ஏற்று, படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இதையடுத்து, மீன்வளத்துறை அதிகாரிகள் அங்கு சென்று படகுகளை ஆய்வு செய்தனர். தற்போது காரை நகர் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 9 படகுகளை மீட்ட, மீன்வளத்துறை குழுவினர், நாளை ராமேஸ்வரம் திரும்பவுள்ளதாக தகவல் அளித்துள்ளார்கள். மேலும், திரிகோணமலை, யாழ்ப்பாணம், கிராஞ்சி ஆகிய பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் அடுத்தடுத்து மீட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages