சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டியில் சலுகை - Agnipuratchi

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டியில் சலுகை

Share This

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 32வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு டெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது "ஜிஎஸ்டி தொகுப்பு சலுகைக்கான வரம்பு ரூ.1.5 கோடியாக ⬆அதிகரிக்கப்படுகிறது. இது வரும் ஏப்.,1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த சலுகை திட்டத்தின் கீழ் வருபவர்கள், வரியை, காலாண்டிற்கு ஒரு முறை வரி சலுத்த வேண்டும். ஆனால், ஆண்டிற்கு ஒரு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். சேவை துறையினருக்கும் இந்த திட்டத்தை அமல்படுத்த கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. தொகுப்பு சலுகைக்கான பலன்கள், சேவை துறையினருக்கும் கிடைக்கும். ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த டிசம்பர் 23ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் 23 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages