நபார்டு வங்கி தமிழக மக்களுக்கு ரூ.2,21,900 கோடி கடன் - Agnipuratchi

நபார்டு வங்கி தமிழக மக்களுக்கு ரூ.2,21,900 கோடி கடன்

Share This

நபார்டு வங்கியின் 2019-2020 நிதியாண்டுக்கான நபார்டு கடனுதவி மதிப்பீடு அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நபார்டு வங்கி தமிழ்நாட்டு மக்களுக்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 900 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்குவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். குறிப்பாக விவசாயப் பெருமக்களுக்கு இத்தொகையில் 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களின் தேவை மக்களிடம் அதிகரித்துள்ளதால், அதனைத் தயாரிக்கும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மாற்றுத் தொழில் தொடங்கவும் வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages