உலக சாதனை படைத்த ஜியோ பொங்கல் - Agnipuratchi

உலக சாதனை படைத்த ஜியோ பொங்கல்

Share This

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கே.எஸ்.ஆர் கல்லூரியில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து பொங்கல் வைத்து சாதனை படைக்க திட்டமிட்டனர். கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனமும், ஜியோ நிறுவனமும் இணைந்து மாணவிகள் பொங்கல் வைக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு காவல் துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். யூனிக் உலக சாதனைக்காக 1800 மாணவிகள் ஒரே நேரத்தில் ஜியோ லோகோ வடிவில் நின்று அனைவரும் சேர்ந்து மொத்தம் 450 கிலோ பொங்கல் வைத்து உலக சாதனை படைத்ததாக யூனிக் உலக சாதனை தலைமை தீர்ப்பாளர் ரஹீமான் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages