சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் - Agnipuratchi

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

Share This

ஹாங்காங்கில் இருந்து கேத்வே பசிபிக் விமானம் மூலம் சென்னை வந்த 2 கொரியப் பெண்கள், சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை கண்காணித்த விமான நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள், இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததையடுத்து, அவர்களை பெண் அதிகாரிகள் கொண்டு சோதனை நடத்தினார்கள். அப்போது 2பெண்களும் தங்களது ஆடைக்கு உள்ளே மற்றொரு மினி ஆடை அணிந்து இருப்பது தெரியவந்தது. அந்த ஆடைக்குள் ஏராளமான சிறு சிறு பைகள் வைத்து தைக்கப்பட்டுயிருந்தது. அந்த பைகளுக்குள் தங்க கட்டிகள் இருந்தன. ஒவ்வொரு பெண்ணும் தலா 12 கிலோ எடை உள்ள தங்க கட்டிகளை அந்த ஆடைக்குள் மறைத்து வைத்துயிருந்தனர். இதனையடுத்து அந்த தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட 24 கிலோ தங்கத்தின் மதிப்பு 8 கோடி ரூபாய் எனக் கூறியுள்ளனர். மேலும், தங்கத்தை கடத்தி வந்த கொரியாவைச் சேர்ந்த ஹேன்பியோல் ஜுங் மற்றும் ஏன்யங் கிம் ஆகியோரைப் பிடித்து, அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages