திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்❓-தேர்தல் ஆணையம் விளக்கம் - Agnipuratchi

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்❓-தேர்தல் ஆணையம் விளக்கம்

Share This

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகார மற்றும் தலைமைச்செயலாளர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 3ம் தேதி தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கஜா புயல் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகிறது, அவை முடிய 3 மாத காலம் ஆகும். ஆகையால் திருவாரூர் உட்பட 19 தொகுதிகளுக்கும் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அதனை கருத்தில் கொண்டு திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ததாகவும் தேர்தலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், திருவாரூரில் உகந்த சூழ்நிலை ஏற்படும்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages