கணினி கண்காணிப்புக்கு எதிரான வழக்கு-மத்திய அரசுக்கு நோட்டீஸ் - Agnipuratchi

கணினி கண்காணிப்புக்கு எதிரான வழக்கு-மத்திய அரசுக்கு நோட்டீஸ்

Share This

நாட்டில் உள்ள எந்த கணினியையும் கண்காணிக்கும் அதிகாரத்தை சிபிஐ, உளவுத்துறை பணியகம், உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் 20ம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கியூபா பிறப்பித்தார். அதன்படி எந்த கணினியில் உள்ள தகவல்களை கண்காணிக்கவும் இடைமறித்து பெறவும் இந்த அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் கணினி சேவை வழங்குபவரும் கணினியின் உரிமையாளரும் தகவலை பெற தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும். மீறினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இதற்கு உள்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில், 6 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages