தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்-கூட்டணி குறித்து ஓபிஎஸ் பேட்டி - Agnipuratchi

தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்-கூட்டணி குறித்து ஓபிஎஸ் பேட்டி

Share This

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், உலகத் தமிழர்களுக்கும், இந்திய மக்களுக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். அவரிடம் கொடநாடு விவகாரம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கொடநாடு சம்பவங்கள் நடைபெற்று 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அடிப்படை ஆதாரமற்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள இயலாமல் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆதாயம் கருதி சர்ச்சைகளை கிளப்புகிறார்கள் என்று குற்றம்சாட்டினார். 
இதனை தொடர்ந்து, தேர்தல் கூட்டணி குறித்து அவரிடம் கேட்டபோது அவசரப்படாமல், பொறுத்திருந்து பாருங்கள் நல்லது நடக்கும். தேர்தல் வருகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள முடியாமல்தான் திமுக நீதிமன்றம் சென்றதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages