கடந்த 2017ம் ஆண்டு ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியின் போது காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளி என போலீசாரால் தெரிவிக்கப்படும் சயன் மற்றும் மனோஜை போலீசார் அண்மையில் கைது⛓ செய்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடநாடு கொலை கொள்ளை தொடர்பான பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலின் சர்ச்சைக்குரிய வீடியோவில், சயன், மனோஜ் ஆகியோர் முதலமைச்சரை தொடர்புபடுத்திப் பேசியிருந்தனர். மேலும் டெல்லியிலும் செய்தியாளர்களை சந்தித்து வழக்கு குறித்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சயன், மனோஜின் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல்-தமிழக அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment