மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளராக பொறுப்பெற்றுள்ள திருநங்கை பெண்மணி அப்சரா சென்னையில் பத்திரையாளர்களை சந்தித்தார். அவர்களுக்கு அளித்த பேட்டியில் அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக என்னை ராகுல்காந்தி நியமித்துள்ளார். இது திருநங்கைகளுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம். 144 வருட பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியில் இப்படி ஒரு பதவி கொடுத்திருப்பது திருநங்கைகள் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம். ராகுல் காந்தி பிரதமரானால் நிச்சயமாக பெண்களுக்காகவும் திருநங்கைகளின் நலன்களுக்காகவும் பாடுபடுவார். காங்கிரசில் பெண்களுக்கு 50% முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆனால் மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளில் பெண்களின் நலன்களுக்காக எந்தச் செயலும் செய்யவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர் பா.ஜ.க ரஜினிகாந்தை வைத்து கொண்டு தமிழகத்தில் அரசியல் செய்ய நினைக்கிறதை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரஜினி எந்தப் பேட்டைக்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால் மக்களின் விசுவாசம் இல்லாமல் ஒரு ஓட்டைக் கூட பெற முடியாது. கலைஞர், எம்,ஜி,ஆர் ஜெயலலிதா போன்றோரைப் பார்த்து ரஜினி அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் விசுவாசம் இல்லாமல் ரஜினிகாந்த் ஓட்டைப் பெறமுடியாது!
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment