அயோத்தி வழக்கிலிருந்து நீதிபதி லலித் விலகல் - விசாரணை ஒத்திவைப்பு - Agnipuratchi

அயோத்தி வழக்கிலிருந்து நீதிபதி லலித் விலகல் - விசாரணை ஒத்திவைப்பு

Share This

அயோத்தி நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என அறிவிக்கபட்டிருந்தது.அதன்படி கடந்த 8ம் தேதி அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, ரமணா, யு.யு.லலித் மற்றும் சந்திராசூட் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ் தவான் என்ற வழக்கறிஞர், அயோத்தி தொடர்பான வழக்கில் பாஜகவின் மூத்த தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங்கிற்கு ஆதரவாக நீதிபதி யு.யு.லலித் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் இந்த வழக்கை ⚖நீதிபதி யு.யு.லலித் விசாரித்தால் வழக்கு ஒருதலைப்பட்சமாகவே விசாரிக்கப்படும் என்று கூறினார். இந்த ஆட்சபனையை ஏற்று வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதி லலித் அறிவித்தார். இதனையடுத்து அயோத்தி வழக்கு விசாரணையில் புதிய நீதிபதியை சேர்த்த பிறகு ஜன., 29ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages