பேருந்து மீது கல்வீசிய வழக்கு-பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - Agnipuratchi

பேருந்து மீது கல்வீசிய வழக்கு-பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Share This

தமிழக கர்நாடக எல்லை பகுதியில் கடத்த 1998ம் ஆண்டு நடந்த கலவரத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியதாக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீது புகார் எழுந்தது. கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை⛓ தண்டனை விதித்தது. இதனால் அதிமுக விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியினை அவர் இழந்தார். இதையடுத்து, நீதிமன்றம் விதித்த சிறை⛓ தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு கீழ்நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாலகிருஷ்ணரெட்டி மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக்கோரி நாளை உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages