சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - Agnipuratchi

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Share This

பூண்டி, சோழவரம், புழல், செம்பரபாக்கம் ஆகிய ஏரிகள் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருவதில் முக்கியபங்கு வகிக்கிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் இந்த ஏரிகளின் நீர்மட்டம் கடும் சரிவு கண்டுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி 1 மாதத்திற்கு மட்டுமே சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. எனவே ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீரை தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே, செம்பரபாக்கம் ஏரியில் 96 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ள நிலையில், பூண்டி, சோழவரம், புழல் உள்ளிட்ட நான்கு ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.25 டிஎம்சி ஆக இருக்கும் பட்சத்தில், தற்போது 1.351 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது என்பது கவலைக்குரியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages