தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக, உணவகங்கள் உள்ளிட்ட கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழை இலை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்று வந்த ஒரு கட்டு வாழை இலை, தற்போது 600 முதல் 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் நாமக்கல், சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வாழை இலைகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது "500 பெரிய இலைகள் கொண்ட ஒரு கட்டு விலை, 750 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தட்டு போன்ற ஒரு இலையின் விலை, ஒரு ரூபாயில் இருந்து ஒரு ரூபாய் 20 காசுகளாக அதிகரித்துள்ளது.முகூர்த்தம் போன்ற சீசன் காலங்களில் இலையின் வரத்தைப் பொறுத்து, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் இந்த விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும்" அவர்கள் தெரிவித்தனர்.
வாழை இலைகளுக்கு அதிகரிக்கும் மவுசு - விவசாயிகள் மகிழ்ச்சி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment