தடையை மீறி சென்னையில் பேருந்து தினம் கொண்டாடிய மாணவர்கள் கைது - Agnipuratchi

தடையை மீறி சென்னையில் பேருந்து தினம் கொண்டாடிய மாணவர்கள் கைது

Share This

சென்னையில் நேற்று முன்தினம் தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடிய அம்பேத்கர் கலைக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிராட்வேயில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் 57எப் வழித்தட பேருந்தில், வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், நேற்று முன்தினம் தடையை மீறி பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்தின் மீது அபாயகரமாக நின்று கொண்டு மாணவர்கள் பயணித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி மூலம் எம்.கே.பி நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பேருந்து தினம் கொண்டாடியதற்காக அப்துல் ஹாகிப், பிரவின், நவின், ஜிர்ஃபான் பாஷா, மோகன் குமார் ஆகிய 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages