எழும்பூரில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஒருநாள் யோகா பயிற்சி முகாம் - Agnipuratchi

எழும்பூரில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஒருநாள் யோகா பயிற்சி முகாம்

Share This

சென்னை எழும்பூரிலுள்ள மாநில முன்மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், மாநில அளவில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மாவட்டத்துக்கு 2 பேர் வீதம் 64 உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இங்கு பயிற்சி பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள் அவரவர் மாவட்டங்களிலுள்ள மற்ற உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்றும் அவர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உடல், மன வலிமையை மேம்படுத்தும் நோக்குடன் இந்தப் பயிற்சி வழங்கப்படுவதாகவும் அவர்கள் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages