சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி நினைவிடம் அமைக்கப்படுவதாகவும் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மேல்முறையீடு காலத்தில் ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதால் அவர் குற்றவாளி இல்லை என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், மாநில கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை மண்டலம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் அனுமதி பெற்று தான் கட்டுமான பணிகள் நடப்பதாகவும் அரசு சார்பில் கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க முடியாது என கூறி எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடையில்லை-உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment