சாலை மறியலில் ஈடுபட்டதால் ஜாக்ட்டோ ஜியோ அமைப்பினர் கைது - Agnipuratchi

சாலை மறியலில் ஈடுபட்டதால் ஜாக்ட்டோ ஜியோ அமைப்பினர் கைது

Share This

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று 2வது நாள் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 300 இடங்களில், அனைத்து மாவட்டத்திலும் தாலுகா அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, அவிநாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அரசு பஸ்களிலும், வேன்களிலும் அழைத்து சென்றனர். பல இடங்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages