வேலை நிறுத்ததினை அறிவித்த சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள்-வழக்கம்போல் பணியாற்றுகிறார்கள் - Agnipuratchi

வேலை நிறுத்ததினை அறிவித்த சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள்-வழக்கம்போல் பணியாற்றுகிறார்கள்

Share This

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக, இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். அப்போது, தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தினர் இருதரப்பாக பிரிந்து, மாறுபட்ட கருத்து கூறியதால், இன்று வேலைநிறுத்தம் நடைபெறுமா❓நடைபெறாதா❓என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில், இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் சங்கத்தின் அலுவலகம் முன்பு, ஊழியர்கள் கூடியிருந்தனர். அப்போது அவர்களிடையே உரையாற்றிய சங்கத்தின் தலைவர் அந்தோனிசாமி, இன்று வழக்கம்போல் பணியில் ஈடுபட உள்ளதாகவும், மாலை 4 மணிக்கு செயற்குழு கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages