மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்து உள்ளதாகவும், இந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கும்படியும் சென்னை கே.கே.நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பதில் அளிக்க கால அவகாசம் கேட்டனர். இந்நிலையில், அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் ஜெயலலிதா மீது உள்ள நிலையில், அவருக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் ஏதாவது உள்ளதா❓என்று அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சொத்துக்கள் உள்ளதா❓-நீதிமன்றம் கேள்வி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment