அதிமுக சார்பில் ஓசூர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாலகிருஷ்ணா ரெட்டி. கடந்த 1998ம் ஆண்டு, பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கியதாக வழக்கு இவர் மீது தொடுக்கப்பட்ட நிலையில் தற்போது, அவருக்கு 3 ஆண்டு சிறைத்⛓ தண்டனையும் 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேசமயம், பாலகிருஷ்ணா ரெட்டியின் முறையீட்டை ஏற்று, மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக சிறைத்தண்டனையை மட்டும் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் தம் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். பின்பு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பாலகிருஷ்ணா ரெட்டி தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அளித்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையனுக்கு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இலாகா கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணரெட்டி ராஜினாமா அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதல் இலாகா
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment