டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது-தேர்தல் ஆணையம் - Agnipuratchi

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது-தேர்தல் ஆணையம்

Share This

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து அவரது தொகுதியான திருவாரூக்கு இடைத்தேர்தலினை ஜனவரி 28ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவாரூர் இடைத்தேர்தலில் தனக்கு குக்கர் சின்னர் ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், குக்கர் சின்னம் பொதுவான சின்னம் என்பதால், அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தற்போது நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. முன்னதாக திருவாரூர் தொகுதியில் கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாலும், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தங்கள ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை இழந்திருக்கக் கூடும் என்பதாலும் தேர்தல் இப்பொழுது வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages