சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கான எதிர்ப்பு போராட்டம் தற்போது வரை தீரவில்லை. இந்நிலையில் போலீசார் பாதுகாப்புக்கிடையே ஐயப்பனை தரிசனம் செய்த பெண்கள் குறித்த அறிக்கையில் சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழா காலங்களில் 51 இளம்பெண்களும் தரிசனம் செய்ததாகவும் தெரிவித்த கேரள அரசு அவர்களின் பெயர் விவரம் மற்றும் ஆதார் அட்டை விவரங்களையும் பட்டியலில் குறிப்பிட்டிருந்தது. இதில் முரண்பாடுகள் உள்ளது என்று புகார் எழுந்ததையடுத்து, அந்த அறிக்கையின் படி, நடத்திய விசாரணை கேரள அரசுக்கு பெரும் பிரச்சனையாக மாறியது. இதையடுத்து பட்டியலில் உள்ள குளறுபடியை கண்டறிந்து புதிய பட்டியல் தயாரிக்க கேரள அரசு உத்தரவிட்டது. இதற்காக தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் அடங்கிய புதுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஏற்கனவே வெளியான 51 பேர் பட்டியலை ஆய்வு செய்தனர். அதில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சில ஆண்களின் பெயர்கள் பட்டியலில் இருந்தது தெரிய வந்த நிலையில் அதிலிருந்து 34 பேரை விடுவித்தனர். மீதம் 17 பேரே சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்ததாக தெரிவித்தனர். இந்த புதிய பட்டியல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
சபரிமலையில் தரிசனம் செய்த இளம்பெண்கள் குறித்த புதிய ஆய்வறிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment