திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் தங்கியிருக்கும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரண்டு நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது காப்பகத்தில் உள்ள நிறை குறைகள் குறித்து சிறுமிகளிடம் எழுத்துப்பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அதில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செயல்பட்ட அருணை குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த சிறுமிகள் சிலர், தங்களுக்கு காப்பக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறினர். காப்பக நிர்வாகி, அடிக்கடி தங்களை காப்பகத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, ஆபாச படங்களை பார்க்கும்படி கட்டாயப்படுத்துவதாகவும், பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், ஒரு கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி இந்த தகவல்களால் அதிர்ச்சியடைந்து நேரடியாக களத்தில் இறங்கி, சக அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் நேற்று அந்த காப்பகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் காப்பக நிர்வாகி வினோத் குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காப்பகம் சீல் வைக்கப்பட்டு, அதில் தங்கியிருந்த 19 சிறுமிகள் மீட்கப்பட்டு வேறு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Home
அண்மை செய்திகள்
திருவண்ணாமலை காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை -நிர்வாகி மீது நடவடிக்கை
திருவண்ணாமலை காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை -நிர்வாகி மீது நடவடிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment