சென்னை பெரம்பூரில் இயங்கி வரும் ரேவதி தங்க மாளிகை, ரேவதி வீட்டு உபயோக பொருட்கள் கடை, ரேவதி சூப்பர் மார்க்கெட் மற்றும் துணிக்கடைகளில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதே பகுதியில் உள்ள ரேவதி குழுமத்தின் உரிமையாளர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து நிறுவனங்களை தொடங்கியுள்ளனர். இதற்கான முதலீடு செய்த பணம் எங்கிருந்து வந்தது⁉என்றும், வருவாயை மறைத்தது தொடர்பான புகாரிலும் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே போல, சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்கடன் சாலையில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்திலும், சோதனையில் சிக்கியுள்ள மற்ற நிறுவங்களுடன் வணிக தொடர்பிலும் இருப்பதால் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தாம்பரம் சேலையூரில் இயங்கி வரும் லோட்டஸ் குழும நிறுவனத்திலும், இது தவிர சோதனையில் சிக்கியுள்ள பிரபல நிறுவங்களுடன் தொடர்பில் உள்ள சிறு நிறுவனங்கள், கணக்கேடுகளை முறையாக பராமரிக்கவில்லை என்ற அடிப்படையில் சோதனை நடக்கிறது. இந்நிலையில், ஜி ஸ்கொயர் மற்றும் லோட்டஸ் கட்டுமான நிறுவனங்களில் நடந்த சோதனையில் இதுவரை 15 கோடி ரூபாய் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுதவிர பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததையும் வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. புதன்கிழமை இரண்டாவது நாளாக சோதனை நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் வருமான வரி சோதனை-15 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment