முஸ்லிம் பெண்களை அவர்களின் கணவர்கள் ஒரே நேரத்தில் மூன்று முறை ‘தலாக்’ கூறி விவகாரத்து செய்யும் நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கான சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதைத்தொடர்ந்து, முத்தலாக் சட்ட மசோதா கடந்த செப்டம்பரில் இயற்றப்பட்டது. இதில் சில திருத்தங்களுடன் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டு, கடந்த டிசம்பரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. ஒருமுறை அவசரச் சட்டம் இயற்றப்பட்டால் 6 மாதத்தில் நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் காலாவதியாகி விடும். எனவே, வரும் 22ம் தேதியுடன் முத்தலாக் அவசர சட்டம் காலாவதியாக இருப்பதால், மீண்டும் இந்த அவசரச் சட்டத்தை பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம், முத்தலாக் அவசரச் சட்டம் நேற்று முன்தினம் இரவு மீண்டும் பிறக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஒப்புதலோடு முத்தலாக் அவசரச் சட்டம் மீண்டும் பிறப்பிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment