சபரிமலை மகரஜோதி-லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் - Agnipuratchi

சபரிமலை மகரஜோதி-லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Share This

மலையாள மாதமான  மகரத்தின் முதல் தேதி அன்று பொன்னம்பல மேட்டில் தெரியும் ஜோதியை மகர ஜோதி என்று அழைப்பது சபரிமலை சன்னிதான வழக்கம். அதன் நடப்பு ஆண்டின் மகரஜோதி தரிசனத்தை காண கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் சபரிமலையில் திரண்டனர். இதனிடையே மகரவிளக்கு பூஜைக்காக பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டது. அதிலிருந்த திருவாபரணங்களை பூட்டி அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன. இந்நிலையில் மாலை 6.35 மணி அளவில் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி பளிச்சிட்டு பிரகாசித்தது. மூன்று முறை தெரிந்த ஜோதியை கண்டு பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர். இதன் பின்னர் கோவிலில் மகர சங்கரம சிறப்பு பூஜையும், அபிசேகமும் நடைபெற்றது. மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages