நெகிழி உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் - Agnipuratchi

நெகிழி உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

Share This

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை உத்தரவினை நேற்று முதல் அரசு அமல் செய்துள்ளது. இதுதொடர்பாக பேசிய சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்த நெகிழி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ். பாலாஜி தமிழக அரசு நெகிழி பயன்பாட்டுக்கான தடை உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்னதாக எங்களிடம் எதுவும் கலந்தாலோசிக்கவில்லை. மாற்று வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதற்கு போதிய கால அவகாசமும் வழங்கவில்லை. எங்களை ஆறு ஆண்டுக்குள் தொழிலை மாற்றிக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் அதற்கு எங்களுக்கு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இதுக்குறித்து பேசிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கரமராஜா மாற்றுத் தொழிலை நாடுவதற்கு தமிழக அரசு போதிய கால அவகாசம் வழங்கவேண்டும். மக்கள் பயன்படுத்துக்கூடாத பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில், மறுசுழற்ச்சிக்கு உட்படுத்தப்படும் நெகிழி பொருட்களும் அடங்கியுள்ளது என்று அவர் கூறினார். இதுதொடர்பாக, பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சிலர் சென்னை மாநகர ஆணையர் டி. கார்த்திகேயனை சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளதோடு, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினையும் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages