சென்னை ஐஐடி கல்லூரியில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் வெளியிட்டுள்ள தகவலில், ஜார்கண்டை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னை ஐஐடி கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வந்துள்ளார். இவர் கடந்து இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை ஐஐடி மாணவிகள் விடுதியில் உள்ள தனது அறையில் உள்தாழிட்டு பூட்டி இருந்துள்ளார். அதற்கு பிறகு அவர் வெளியே வரவில்லை. இதனையடுத்து நேற்று காலை மாணவியின் அறையிலிருந்து துர்நாற்றம் வீசுவதை சுவாசித்த சகமாணவிகள் உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அறையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது அழுகிய உடலை மீட்ட போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை-அழுகிய நிலையில் சடலம் மீட்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment