தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது - Agnipuratchi

தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது

Share This

கடந்த 22ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. பிப்ரவரி முதல் தேதியில் இருந்து செயல்முறைத் தேர்வுகளும், மார்ச்சில் இருந்து பொதுத் தேர்வுகளும் தொடங்கவுள்ளதால், கல்வித் தகுதியுடைய பட்டதாரிகளை தற்காலிக ஆசிரியர்களாக பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலமாக நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. உரிய விண்ணப்பங்கள் பெற்று தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மாதத்துக்கு தலா 7 ஆயிரத்து 500 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 7 ஆயிரத்து 500 ரூபாய் என்ற மாத சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages