சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004ம் ஆண்டிற்கு முன்னர் இருந்த சிலையில் மயில் வாயில் பூ மற்றும் லிங்கம் இடம் பெற்றிருந்தது. ஆனால் தற்போது உள்ள சிலையில் மயில் வாயில் பாம்பு இருப்பது போன்று உள்ளது. இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் சிலை மாற்றப்பட்டது உறுதியானது. இதனையடுத்து அப்போதைய மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் துணை ஆணையரும், தற்போதைய கூடுதல் ஆணையருமான திருமகள் கைது⛓ செய்யப்பட்டார். ஆனால் உடனே ஜாமீனில் வெளியில் வந்து விட்டதால், வலுவான ஆதாரங்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சிலைகள் மாற்றப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
புன்னைவன்னநாதர் சன்னதியில் மயில் சிலைக்கு விழாக்காலங்களில் வெள்ளி கவசம் சாத்துவார்கள். தற்போதுள்ள மயில் சிலைக்கு வாயில் பாம்பு சிற்பம் உள்ளதால் வெள்ளி கவசத்தை சாற்றினால் அது சிலையுடன் பொருந்தவில்லை. இதன் மூலம் சிலை மாற்றப்பட்டது ஊர்ஜிதமாகியுள்ளது. எனவே இந்த வழக்கில் இருந்து கூடுதல் ஆணையர் தப்பமுடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள்.
கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாற்றம்-ஆதாரம் சிக்கியது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment