புது பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா - Agnipuratchi

புது பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா

Share This

சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்புத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்த சிபிஐ முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் மத்திய பணியாளர் அமைச்சக செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இன்றோடு என் பணிக்காலம் முடிவடைந்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள். தீயணைப்புத்துறை இயக்குநர் பணிக்கான வயது வரம்பை நான் முன்பே கடந்துவிட்டேன். மீண்டும் முன்பே முடித்த பணிக்கு செல்வது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages