நக்கீரன் கோபாலை சிறையில் அடைப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் - Agnipuratchi

நக்கீரன் கோபாலை சிறையில் அடைப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம்

Share This

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகையை சம்மந்தப்படுத்தி நக்கீரன் இதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. இதனை அடுத்து ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பெயரில் கோபால் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, அன்று மாலை எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து குற்றவியல் நடுவர் கோபிநாத், பிரிவு 124ன் கீழ் நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கில் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க மறுப்பு தெரிவித்ததோடு, அவர் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தார். இதனை எதிர்த்து, ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவானது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நக்கீரன் கோபாலை சிறையலடைக்க முடியாது என்ற எழும்பூர் நீதிமன்ற உத்தரவு சரிதான் என்று கூறியுள்ளார். மேலும், ஒருவரை கைது செய்வதற்கு உள்ள விதிகளை சரியாக கடைபிடித்துள்ளதாக எழும்பூர் நீதிமன்றம் நீதிபதி கோபிநாத்க்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages